இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தியது.
கடைசி போட்டியில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தத் தொடரில் சிராஜ் 5 போட்டிகளில் 185.3 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியதாவது:
சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது
இங்கிலாந்து தொடரில் சிராஜ் கவனிக்கப்படத்தக்க பந்துவீச்சை வீசினார். அவருடைய ஆற்றல், கோபம், தொடர்ச்சியாக நன்றாக வீசுவது என உலக தரத்தில் பந்து வீசினார்.
பக்குவமடைந்த சிராஜ் இந்தியாவுக்கு ஆட்ட நாயகனாக மாறினார். அவரை எதிர்த்து விளையாடுவது எப்போதும் சவலானதுதான்.
பந்தைக் கட்டுப்படுத்துவதுதான் அவரிடம் மிகுதியாக கவர்ந்தது. அதுதான் அவரைச் சிறப்பானவராக மாற்றியது. அவர் உண்டாக்கிய தாக்கத்திற்கு அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.