ரிஷப் பந்த் படம் | AP
கிரிக்கெட்

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-2 என சமன் செய்தது.

மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்று கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்

தனது பந்துவீச்சில் ரிஷப் பந்த்தின் கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் வோக்ஸ்

இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது: இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை சல்யூட் எமோஜியுடன் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். அதனால், அவருக்கு நான் நன்றி கூறினேன். அவரது அன்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தேன். அவரது கால் தற்போது நன்றாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய பந்துவீச்சில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

காயத்துடன் ஓவல் டெஸ்ட்டில் நான் களமிறங்கியதை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பாராட்டினார். உங்களது தைரியம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது எனக் கூறினார். இந்த தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். உங்களது அணி சிறப்பாக செயல்பட்டது என அவரிடம் நான் கூறினேன் என்றார்.

England fast bowler Chris Woakes has said that he has apologised to Indian wicketkeeper Rishabh Pant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

SCROLL FOR NEXT