ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய மகளிரணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் இறுதியில் தொடங்குகிறது. இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்த ஐசிசி தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பேசியதாவது: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமில்லாமல், ஒருநாள் போட்டிகளிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
அவர்களது சொந்த மண்ணிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால், இந்திய அணிக்கு இதைவிட சிறப்பான வாய்ப்பு கிடைக்காது என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் ஒருநாள் தொடர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.