டெவால்டு பிரேவிஸ். 
கிரிக்கெட்

டி20 தரவரிசை: அதிரடி நாயகன் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேற்றம்!

டி20 தரவரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரேவிஸ் அதிரடி முன்னேற்றம் பெற்றுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளார்.

சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்காக டி20 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூறாவளியாக சுழன்ற டெவால்டு பிரேவிஸ் 125* ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக 101 வது இடத்தில் இருந்த டெவால்டு பிரேவிஸ், கடந்த வாரம் மளமளவென 80 முன்னேறி 21 வது இடத்தைப் பிடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 6 சிக்ஸர்களுடன் 26 பந்துகளில் 53 ரன்கள் குவித்திருந்தார். இதனால், இந்த வார தரவரிசைப் பட்டியலில் 9 இடங்கள் முன்னேறி, 12 வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரின் சிறந்த தரநிலையாகும்.

ஒரே தொடரில் 89 இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளார் டெவால்டு பிரேவிஸ். வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டெவால்டு பிரேவிஸ் மிக விரைவாக முதல் 15 இடங்களைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர் முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர்.

டி20 பேட்டர்கள் தரவரிசை

  1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள்

  2. திலக் வர்மா - 804 புள்ளிகள்

  3. பில் சால்ட் - 791 புள்ளிகள்

  4. ஜோஸ் பட்லர் - 772 புள்ளிகள்

  5. டிராவிஸ் ஹெட் - 771 புள்ளிகள்

  6. சூரியகுமார் யாதவ் - 739 புள்ளிகள்

  7. பதும் நிசங்கா - 736 புள்ளிகள்

  8. டிம் செர்ஃபெய்ட் - 725 புள்ளிகள்

  9. டிம் டேவிட் - 676 புள்ளிகள்

  10. யஷஸ்வி ஜெய்ஸ்வால் -673 புள்ளிகள்

South African batsman Dewald Brevis has jumped 89 spots to 12th in the ICC T20I batting rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெட்கச் சிரிப்பில்.... அனுமோள்!

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

SCROLL FOR NEXT