மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் டாம் லாதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினர்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 64 ரன்கள் முன்னிலை பெற்றது.
டாம் லாதம், ரச்சின் ரவீந்திரா சதம் விளாசல்
64 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 417 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லாதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரச்சின் ரவீந்திரா 185 பந்துகளில் 176 ரன்கள் எடுத்தார். அதில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். டாம் லாதம் 250 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். டெவான் கான்வே 37 ரன்களும், கேன் வில்லியம்சன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமர் ரோச் மற்றும் ஓஜா ஷீல்ட்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
வில் யங் 21 ரன்களுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.