இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணியின் விவரம் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது.
உலக அளவில் அனைத்து விளையாட்டு அணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4-வது இடம் பிடித்துள்ளது.
இந்த சாதனை தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை வணிக அலுவலர் சௌரப் அரோரா பேசியதாவது: இது மிகவும் முக்கியமான சாதனை. ஏனெனில், இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் அணியின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உழைத்துள்ளோம் என்பதற்கு இந்த சாதனையே சான்று. எங்களது அணி மக்களுடன் ஒன்றாக இணைந்துள்ளது என்றார்.
இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட அணிகளின் வரிசையில் தில்லி கேபிடல்ஸ் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஷஃபாலி வர்மா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.