ஜோ ரூட் சதத்தினால் முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடனின் நிர்வாண ஊர்வலம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஹைடனின் மகளும் கருத்து தெரிவித்துள்ளது சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல் ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்காமல் இருந்தார்.
இந்தத் தொடருக்கு முன்பாக முன்னாள் ஆஸி. வீரர் மேத்திவ் ஹைடன் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் தான் நிர்வாணமாக மெல்போர்ன் கிரிக்கெட் திடலைச் சுற்றிவருவதாகக் கூறினார்.
தற்போது, இரண்டாவது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் அடித்து ஹைடனின் நிர்வாண ஊர்வலத்தை காப்பாற்றி விட்டார்.
இது குறித்து வர்ணனையாளராக இருக்கும் ஹைடனின் மகளான கிரேஸ் ஹைடன் பேசியவை கவனம் ஈர்த்து வருகின்றன.
போட்டியின்போது கிரேஸ் ஹைடன், ”தயவுசெய்து சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்” எனக் கூறினார்.
சதம் அடித்ததும், “மிக்க நன்றி ஜோ ரூட். நீங்கள் எங்களது கண்களைக் காப்பாற்றிவிட்டீர்கள்” எனக் கூறினார்.
மேலும் தனது இன்ஸ்டா பதிவிலும் இது குறித்து பதிவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.