இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்துள்ளார்.
தற்போது, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
பிரிஸ்பேனில் கடந்த டிச.4ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸி. அணி 104 ஓவர்களில் 470/8 ரன்கள் எடுத்துள்ளது.
மிட்செல் ஸ்டார் - ஸ்காட் போலண்ட் கூட்டணி 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
இதில் மிட்செல் ஸ்டார்க் 57 ரன்களும் போலண்ட் 15 ரன்களும் எடுத்துள்ளார்கள்.
பேஸ்பால் எனப்படும் அதிரடியான ஆட்டத்துக்கு உரிமைகோரும் இங்கிலாந்து அணிக்கு அதே வைத்தியத்தை வைத்து ஆஸி. அணி சிகிச்சை அளித்து வருகிறது.
முதல் போட்டியில் தோல்வியுற்றதால் இந்தப் போட்டி இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.