தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கடைசியாக இந்திய அணி 2023 உலகக் கோப்பை அரையிறுதியில் டாஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக திலக் வர்மா அணியில் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காயம் காரணமாக விலகிய ஸோர்ஸி, பர்கருக்குப் பதிலாக ரிக்கல்டன், பார்ட்மன் அணியில் இணைந்துள்ளார்கள்.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வெல்ல, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.