சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் அடித்த 6-ஆவது இந்திய வீரர் சாதனைப் பட்டியலில் இணைந்தார் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமை(டிச. 6) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 271 ரன்கள் இலக்கை, இந்திய அணி 39.5 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், 121 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 116 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார் ஜெய்ஸ்வால்.
இந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 3 வடிவ போட்டிகளிலும் சதம் கடந்த 6-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சாதனைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கே. எல். ராகுல், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.