ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைவான டெஸ்ட் போட்டிகளில் அதிகமான கேட்ச்சுகள் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்கள் எடுத்தவர்கள் வரிசையில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2, இரண்டாவது இன்னிங்ஸில் 3 என மொத்தம் 5 கேட்ச்சுகள் என ஃபீல்டிங்கில் ஆட்டத்தையே மாற்றினார்.
இதன்மூலம் 210 கேட்ச்சுகளுடன் ராகுல் திராவிட்டை சமன்படுத்தியுள்ளார். இருப்பினும் குறைவான போட்டிகளிலே இந்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்
1. ஜோ ரூட் - 213 (160 போட்டிகள்)
2. ஸ்டீவ் ஸ்மித் - 210 (121 போட்டிகள்)
3. ராகுல் திராவிட் - 210 (164 போட்டிகள்)
4. மஹிலா ஜெயவர்தனே - 205 (149 போட்டிகள்)
5. ஜேக் காலிஸ் - 200 (166 போட்டிகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.