இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் நாதன் லயன் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத நிலையில், இது குறித்து லாதன் நயன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் நாதன் லயன் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: நாதன் லயனுக்கு எதிராக அணி நிர்வாகம் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அவர் மிகச் சிறந்த வீரர். அவர் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், அணியில் கூடுதல் பேட்டிங் தெரிவுகள் வேண்டும் என்பதன் காரணமாகவே அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாமல் போனது. பின்வரிசை ஆட்டக்காரர்கள் 50 ஓவர்கள் நின்று விளையாடியது அணியின் சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்தது. நாதன் லயனுக்கு எதிராக அணி நிர்வாகம் செயல்படவில்லை. அவர் நம்பமுடியாத அளவுக்கு மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் நாதன் லயன் 562 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை நாதன் லயனையேச் சேரும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் நாதன் லயன் இடம்பெறாதது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி, பிளேயிங் லெவனில் நாதன் லயன் சேர்க்கப்படாதது ஒரு டெஸ்ட் போட்டிக்கு எடுக்கப்பட்ட முடிவு எனவும், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் கண்டிப்பாக இடம்பெறுவார் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.