இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்க அணி முறியடித்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற முதல் அணியாக தென்னாப்பிரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது.
முல்லான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20யில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா 213 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தெ.ஆ. சார்பில் பார்ட்மன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்தியாவுக்கு எதிராக அதிக டி20 வெற்றிகள்
1. தென்னாப்பிரிக்கா - 13 (33 போட்டிகளில்)
2. ஆஸ்திரேலியா - 12 (37 போட்டிகளில்)
3. இங்கிலாந்து - 12 (29 போட்டிகளில்)
4. நியூசிலாந்து -10 (25 போட்டிகளில்)
5. மேற்கிந்தியத் தீவுகள் - 10 (30 போட்டிகளில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.