யு-19 இந்திய வீரர்கள்.  படம்: எக்ஸ் / ஏசிசிமீடியா.
கிரிக்கெட்

யு-19 ஆசிய கோப்பை: இந்தியா 433 ரன்கள் குவிப்பு!

யுஎஇ அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

யு-19 ஆசிய கோப்பையில் யுஎஇ அணிக்கு எதிராக இந்திய அணி 433 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.

துபையில் நடைபெற்றுவரும் முதல் யு-19 ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் வென்ற யுஎஇ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்துள்ளது.

சூர்யவன்ஷியைத் தொடர்ந்து ஆரோன் ஜார்ஜ், விஹான் மல்ஹோத்ரா தலா 69 ரன்கள், வேதாந்த் த்ரிவேதி 38 ரன்கள் எடுத்தார்கள்.

யுஎஇ அணி சார்பில் யுக் சர்மா, உத்தேஷ் சூரி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

India scored 433 runs against UAE in the U-19 Asia Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சரண்: ஆயுதங்களும் ஒப்படைப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 6-வது இடத்துக்கு இந்தியா சறுக்கல்!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பார்வதி நாயரின் உன் பார்வையில் திரைப்படம்!

நினைத்தவை நடந்தேற...

அனைத்தும் தருவார் ஆடங்கநாதர்

SCROLL FOR NEXT