3-ஆவது டி20: தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பம்முதலே அடி! இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு!
3-ஆவது டி20யில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் தடுமாறிய தென்னாப்பிரிக்கா!
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 118 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) மாலை தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் 2 ஓவர்களிலேயே 2 முக்கிய விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. பவர்-ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்கள் விழுந்தன. இதனால் அந்த அணியின் ரன் குவிக்கும் வேகம் அதிகரிக்கவேயில்லை.
இறுதியில், 20 ஓவர்களில் அந்த அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
தொடர்ந்து, 118 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.