IPL 2026 MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலத்தில் 19 வயது இளம் விக்கெட் கீப்பரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதாகும் கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
வலதுகை விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.