ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விலகியுள்ளார்.
இவருக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா நம்.4 இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார்.
வலைப்பயிற்சியின்போது ஸ்டீவ் ஸ்மித் வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பயிற்சி மேற்கொள்ளாமல் விலகினார்.
ஏற்கனவே சிலமுறை இதுபோல ஸ்மித்திற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இந்தமுறை அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
கடந்த சில நாள்களாக ஸ்மித்திற்கு உடல்நலம் சரியில்லை. குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் இருந்தன.
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவரும் அவர் தற்போதைக்கு விளையாடமுடியாது.
ஸ்மித்திற்கு வெஸ்டிபுலர் பிரச்னைக்காக மருத்துவம் பார்த்து வருகிறார். ஏற்கெனவே இதுபோல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே போட்டியில் விளையாடுவார் எனக் கூறினார்.
பாட் கம்மின்ஸ் டாஸின்போது, ”ஸ்மித்திற்கு உடல்நிலை சரியில்லை. வீட்டிற்குச் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக கவாஜா நம்.4-இல் விளையாடுவார்” எனக் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 326-8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82 ரன்கள் எடுத்தார்கள்.
ஆஷஸ் தொடரில் தோல்வியே காணாத கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.