ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025 -26: மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது.
மூன்றாம் நாளின் தொடக்கத்தில் 84.1ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் பென் ஸ்டோக்ஸ் போல்ட் ஆனார்.
அடுத்து 87.2ஆவது ஓவரில் ஆர்ச்சரும் ஆட்டமிழந்து இங்கிலாந்து அணி 286க்கு ஆல் அவுட்டானது. கம்மின்ஸ், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து, இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய ஆஸி. அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 66 ஓவர்களில் 271/4 ரன்கள் குவித்தது.
ஆஸி. இரண்டாம் இன்னிங்ஸ்
டிராவிஸ் ஹெட் - 142*
அலெக்ஸ் கேரி - 52*
உஸ்மான் கவாஜா - 40
இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 2, வில் ஜாக்ஸ், பிரைடன் கார்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
முதல் இன்னிங்ஸ் - இங்கிலாந்து
பென் ஸ்டோக்ஸ் - 83
ஜோஃப்ரா ஆர்ச்சர் - 51
ஹாரி புரூக் - 45
கம்மின்ஸ், போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.
முதல் இன்னிங்ஸ் - ஆஸி.
அலெக்ஸ் கேரி - 106
உஸ்மான் கவாஜா - 82
மிட்செல் ஸ்டார்க் - 54
ஆர்ச்சர் 5, பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.