முகப்பு
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராக சிறந்த வழி என்ன என்பது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.

Updated On : 19 டிசம்பர் 2025, 1:43 pm IST
வருண் சக்கரவர்த்தி - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராக சிறந்த வழி என்ன என்பது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி பேசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு இன்னும் 6 டி20 போட்டிகளே மீதமிருக்கின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தொடர்ச்சியாக தனக்குத் தானே சவால்களை ஏற்படுத்திக் கொள்வதே டி20 உலகக் கோப்பைத் தயாராக சிறந்த வழி என இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராக உங்கள் மீது தொடர்ச்சியாக நீங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். எந்தவொரு சவால்களும் இல்லாதபோதிலும், உங்களை நீங்களே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டி எளிதாக இருந்தால், மனதளவில் உங்களுக்கு நீங்களே சவால்களை ஏற்படுத்தி உங்களது திறமைக்கு சவாலளிக்க வேண்டும்.

நம்பிக்கை, சரியான பகுதிகளில் பந்துகளை வீசுவது மற்றும் எதிரணி குறித்து தெளிவாக புரிந்து வைத்திருப்பது போன்றவை மிகவும் முக்கியம். எதிரணி குறித்து நன்றாக புரிந்து வைத்திருப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்த விரும்புகிறேன். எதிரணியை நன்றாக புரிந்துகொண்டால், என்னால் நன்றாக செயல்பட முடியும் என நினைக்கிறேன்.

என்னுடைய திட்டங்கள் மிகவும் எளிதானவை. சிறந்த லென்த்களில் பந்துவீச வேண்டும். சில நேரங்களில் அது எனக்கு கை கொடுக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் எனக்கு அது உதவியது. அடுத்த போட்டியிலும் அவ்வாறே பந்துவீச முயற்சி செய்வேன். நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையின்றி இருக்கும்போது, உங்களது மனநிலை உங்களது திறமையை பாதித்துவிடும். உங்களது திறமை மீது முழுமையாக நம்பிக்கை வைத்து விளையாடுவது மிகவும் முக்கியம். என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவதே என்னுடைய வெற்றிக்கான ரகசியம் என்றார்.

34 வயதாகும் வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக 32 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Indian team's spinner Varun Chakravarthy has spoken about the best way to prepare for the T20 World Cup tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.