மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வென்று இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா மீண்டும் தன்னிடமே தக்கவைத்துள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. 371 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 3-0 என ஆஸி. தொடரைக் கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.