முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் பேசியுள்ளார்.
2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியை 3-0 என வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி?
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், “கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் மோசமான ஆஸ்திரேலிய அணி” எனக் கூறினார்.
தற்போது, மூன்றாவது டெஸ்ட்டில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
தொடர்ச்சியாக 18 முறை ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி தோல்வியுற்றுள்ளது.
போட்டிக்குப் பிறகு, மார்னஸ் லபுஷேன் ஏபிசி ரேடியோவில் பேசியதாவது:
5-0 என வெல்லுவோம்...
எங்களை 15 ஆண்டுகளில் இதுதான் மோசமான ஆஸ்திரேலிய அணி என்று மிகைப்படுத்தி பேசியதைக் கேட்டிருப்போம்.
தற்போது, நாங்கள் 3-0 என்ற நிலையில் இருக்கிறோம். இத்துடன் விடுவதாயில்லை. நிச்சயமாக 5-0 என தொடரை வெல்லுவோம்.
இன்று இரவு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். டிராவிஸ் ஹெட் நிச்சயமாக இந்த இரவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்.
நான் ஒவ்வொரு முறையும் நல்ல கேட்சிற்கு பிறகு முட்டாள்தனமாக எதுவும் செய்யக் கூடாது என நினைக்கிறேன் என்றார்.
இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் 5 கேட்சுகள் எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.