இந்திய மகளிர் அணி.  
கிரிக்கெட்

யு19 மகளிர் உலகக்கோப்பை- இந்தியா சாம்பியன்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்று அசத்தியுள்ளது.

DIN

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக வான் வூர்ஸ்ட் 23, ஜெம்மா போத்தா 16 ரன்களை எடுத்தனர்.

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

இந்திய ஸ்பின்னர்கள் அசத்தலாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அபாரமாக பந்துவீசிய கொங்கடி த்ரிஷா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

83 ரன்களை இலக்காக களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் அசத்திய கொங்கடி த்ரிஷா பேட்டிங்கிலும் முத்திரை பதித்தார். அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சானிகா சால்கேவும் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நடப்பு சாம்பியனான இந்தியா தொடர்ந்து 2அவது முறையாக யு19 டி20 மகளிர் உலக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பிரதமர் மோடி உள்பட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கரில் நாளை 100 மாவோயிஸ்டுகள் சரண்: துணை முதல்வர் விஜய் சர்மா!

2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

SCROLL FOR NEXT