கிரிக்கெட்

சேஸிங்கில் வரலாற்று சாதனை..! முத்தரப்பு தொடரில் இறுதிப் போட்டிக்கு தேர்வான பாகிஸ்தான்!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தெ.ஆ. வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.

DIN

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தேர்வானது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அதிகமாக வெற்றி பெறும் இரண்டு அணிகள் பிப்.14ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாடும் என திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தெ.ஆ. எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையும் இதன் மூலம் பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகபட்சமாக சல்மான் அஹா 134, முகமது ரிஸ்வான் 122 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். சல்மான் அஹா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் படைத்த சாதனைகள்

  • பாகிஸ்தானின் அதிகபட்ச வெற்றிகரமான ஒருநாள் ரன்-சேஸிங்

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச வெற்றிகரமான ஒருநாள் ரன்-சேஸிங்

  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தானின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்

  • ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானின் அதிகபட்ச நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்

  • ஒருநாள் போட்டிகளில் மைதானத்தில் எந்த விக்கெட்டுக்கும் எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (260 ரன்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT