3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!
ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது.
கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர்.
Advertisement
Advertisement
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு, எவ்வளவு அபராதம்?
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் ஆடும்போது 28ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வேண்டுமென்றே மேத்திவ் பிரிட்ஜ்கி ரன் ஓடும்போது இடைமறித்தார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்ததாக 29ஆவது ஓவரில் டெம்பா பவுமா விக்கெட்டினை அவருக்கு அருகில் நெருக்கமாகச் சென்று கொண்டாடியதற்காக ஷகில், குலாம் ஆகிய இருவருக்கும் தலா போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் பிஜிடி தொடரில் சாம் கான்ஸ்டாஸை மோதிய விராட் கோலிக்கு 20 சதவிகிதம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
பிப்.14ஆம் தேதி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.