ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அசத்தலான மிடில் ஆர்டர் பேட்டிங்கை அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 14) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாதனையை வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெரியை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிடில் ஆர்டர் வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் விளையாடியதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. வலைப் பயிற்சியில் அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களது கடுமையான வலைப் பயிற்சி போட்டியின்போது கைகொடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் பந்துவீசுவது மிகவும் கடினம் எனத் தெரிந்தது. அதனால், ஆட்டம் எங்களது கைகளை விட்டு நழுவவில்லை என்பதை உணர்ந்தோம் என்றார்.
நேற்றையப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீராங்கனைகள் எல்லிஸ் பெரி (57 ரன்கள்), ரிச்சா கோஷ் (64 ரன்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.