அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன், அவரது அண்ணன் பென் கரன் இருவரும் விளையாடி வருகின்றனர். அதே வரிசையில் சாம் கரனின் மற்றொரு அண்ணனான பென் கரன் ஜிம்பாப்வே அணிக்காக சமீபத்தில் அறிமுகமானார்.
அயர்லாந்து உடனான 3ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர் முடிவில் 240/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பால்பிரின் 64, லோரன் டக்கர் 61, ஹாரி டெக்டர் 51 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய ஜிம்பாம்வே அணி 1 விக்கெட் இழப்புக்கு 39.3 ஓவர்கள் முடிவில் 246/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பென் கரன் 118 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணியில் கிரெய்க் எர்வின் 69, பிரையன் பென்னட் 48 ரன்கள் எடுத்தார்கள். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2-1 என ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பென் கரனும் தொடர் நாயகனாக பிரையன் பென்னட்டும் தேர்வானார்கள்.
மற்ற நாட்டு வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடியது போக இங்கிலாந்து வீரர் மற்ற நாட்டுக்கு விளையாடி அசத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.