இந்திய வீரர்கள்... 
கிரிக்கெட்

பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்ஸி வெளியானது

DIN

பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் இந்திய வீரர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் திடல்களில் இந்தியாவின் தேசியக் கொடி புறக்கணிக்கப்பட்டது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க... ரூ.94 லட்சம் விஐபி டிக்கெட்டுகளை தியாகம் செய்த பிசிபி தலைவர்!

இந்த நிலையில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பெயருடன் சாம்பியன்ஸ் டிராபி இலச்சினை அச்சிட்ட ஜெர்ஸிக்களை அணிந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி சிறந்த வீரர்களுக்கான தொப்பி வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் இந்த ஜெர்ஸியை அணிந்திருந்தனர்.

முதலில் பாகிஸ்தான் லோகோவை போட இந்திய அணி மறுத்திருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சைக்கியா, ஐசிசியின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம் எனத் தெரிவித்திருந்தார்.

அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதியும், இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து போட்டி மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

சமீப காலங்களில் பாகிஸ்தான் பெயரை இந்திய அணியினரின் ஜெர்ஸியில் போட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி போட்டியை நடத்திய பாகிஸ்தானின் பெயரைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க...சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியே வெல்லும்! -ஆஸி. முன்னாள் கேப்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT