ஃபகர் ஸமான் (கோப்புப் படம்) படம் | AP
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகியுள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.

தசைப்பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக ஃபகர் ஸமான் கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சௌத் ஷகீல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 4-வது வீரராக களமிறங்கிய ஃபகர் ஸமான் பேட்டிங்கின்போது, மிகுந்த சிரமப்பட்டார். அவர் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

ஃபகர் ஸமான் விலகல்

காயம் காரணமாக போட்டியின்போது சிரமமடைந்த ஃபகர் ஸமான், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபகர் ஸமானுக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியுள்ள ஃபகர் ஸமானுக்குப் பதிலாக இமாம் உல் ஹக் மாற்று வீரராக பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலகியது குறித்து ஃபகர் ஸமான் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: துரதிருஷ்டவசமாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து நான் விலகியுள்ளேன். ஆனால், அல்லா எனக்காக நல்ல திட்டங்களை கண்டிப்பாக வைத்திருப்பார். சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே பாகிஸ்தான் அணிக்கு எனது ஆதரவை அளிப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT