ரோஹித் சர்மா.  படம்: ஏபி
கிரிக்கெட்

ரோஹித் தவறவிட்ட கேட்ச்..! ஹாட்ரிக் விக்கெட்டை இழந்த அக்‌ஷர் படேல்!

அக்‌ஷர் படேல் ஓவரில் ரோஹித் சர்மா எளிமையான கேட்ச்சை தவறவிட்டார்.

DIN

அக்‌ஷர் படேல் ஓவரில் ரோஹித் சர்மா எளிமையான கேட்ச்சை தவறவிட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் 8.2, 8.3ஆவது பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. 8.4ஆவது பந்தில் ஜேக்கர் அலியின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் சென்றது.

ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா அதைப் பிடிக்க தவறிவிட்டார்.

இந்தக் கேட்ச்சை பிடித்திருந்தால் அக்‌ஷர் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்திருக்கும்.

கேட்ச் தவறவிட்ட விரக்தியில் ரோஹித் சர்மா மைதானத்தில் கையை வைத்து பலமுறை ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பின்னர் அக்‌ஷர் படேலிடம் மன்னிப்பும் கேட்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

ஹோண்டா காா்கள் விற்பனை உயா்வு!

பருவம் தவறி பெய்த மழை: பாதிக்கப்பட்ட ஏசி உற்பத்தியாளா்கள்

ஓஎன்ஜிசி நிகர லாபம் 10% சரிவு!

SCROLL FOR NEXT