அக்‌ஷர் படேலுடன் ரோஹித் சர்மா படம்: ஏபி
கிரிக்கெட்

கேட்ச்சை தவறவிட்டு இப்படியா சமாளிப்பது? ரோஹித் சர்மாவின் ஜாலியான பதில்!

அக்‌ஷர் படேல் ஓவரில் தவறவிட்ட கேட்ச்சுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

அக்‌ஷர் படேல் ஓவரில் தவறவிட்ட கேட்ச்சுக்கு ரோஹித் சர்மா அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் மோதின. இந்தப் போட்டியில் 8.2, 8.3ஆவது பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. 8.4ஆவது பந்தில் ஜேக்கர் அலியின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் சென்றது.

ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா அதைப் பிடிக்க தவறிவிட்டார்.

இந்தக் கேட்ச்சை பிடித்திருந்தால் அக்‌ஷர் படேலுக்கு ஹாட்ரிக் விக்கெட் கிடைத்திருக்கும்.

கேட்ச் தவறவிட்ட விரக்தியில் ரோஹித் சர்மா மைதானத்தில் கையை வைத்து பலமுறை ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது:

நான் அக்‌ஷர் படேலை இரவு உணவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் (புன்னகைக்கிறார்). எளிமையான கேட்ச்சை தவறவிட்டேன். எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட தரத்துக்கு அந்தக் கேட்சை கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். ஆனால், இந்தமாதிரி நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன என்றார்.

இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் திரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT