ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா கேப்டன். படம்: எக்ஸ் / ஐசிசி
கிரிக்கெட்

பந்துவீச்சில் நம்பிக்கை..! பேட்டிங்கை தேர்வு செய்த டெம்பா பவுமா பேட்டி!

சாம்பியன்ஸ் டிராபி 3ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

DIN

சாம்பியன்ஸ் டிராபி 3ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்கின. முதல் போட்டியில் நியூசிலாந்து 60 ரன்களில் வென்றது.

2ஆவது போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற தெ.ஆ. கேப்டன் டெம்பா பவுமா, “நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்கிறோம். நல்ல இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம். எங்களது பந்துவீச்சு மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஷம்ஷி உடன் மற்ற அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள்” எனக் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி

ரியான் ரிகெல்டன், டோனி டி சோர்சி, டெம்பா பவுமா, ரஸ்ஸி வான்டெர் டுசென், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி.

ஆப்கானிஸ்தான் அணி

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி அஸ்மதுல்லா உமர்சாய், குல்படின் நைப், முகமது நபி, ரஷீத் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

வார பலன்கள் - ரிஷபம்

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

SCROLL FOR NEXT