அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஆனது.
மழை நின்று போட்டி தொடங்க நீண்ட நேரம் ஆனதால், ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ரியான் பர்ல் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வெஸ்லி மத்வீர் 11 ரன்களும், தஷிங்கா 10 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் கிரைக் யங் மற்றும் ஜோஷ்வா லிட்டில் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிரஹாம் ஹியூம் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.