ஜஸ்பிரீத் பும்ரா படம்: ஏபி
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசையில் சாதனை படைத்த பும்ரா..!

இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா ஐசிசி தரவரிசையில் அஸ்வினை முந்தியுள்ளார்.

DIN

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவி அஸ்வின் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார். தற்போது, பும்ரா அதை பின்னுக்குதள்ளி சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்னில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தாலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தற்போதைய டாப் 5 பந்துவீச்சாளர்கள்

1.பும்ரா - 907

2. ஹேசில்வுட் - 843

3. கம்மின்ஸ் - 837

4. ரபாடா - 832

5. ஜான்சென் - 803

இதன்மூலம் உலக அளவில் இதுவரை ஒரு பந்துவீச்சாளர் பெற்ற அதிகபட்ச டெஸ்ட் தரவரிசையில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் டேரக் அண்டர்வுட் உடன் சமன்செய்துள்ளார்.

ஆல்-டைம் பந்துவீச்சில் டாப் 4

  • சிட்னி பார்னெஸ் - 932

  • ஜியார்ஜ் லோஹ்மன் - 931

  • இம்ரான் கான் - 922

  • முத்தையா முரளிதரன் - 920

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT