FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால்...: பத்ரிநாத் விமர்சனம்!

ஷுப்மன் கில் குறித்து முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சனம்...

7 ஜனவரி 2025, 1:38 pm IST
- ANI
பகிர்:

இந்திய வீரர் ஷுப்மன் கில் தமிழராக இருந்திருந்தால், அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

பாடர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், 3 போட்டியில் மொத்தம் 5 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து மொத்தமாக 93 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிக்க : ஏமாற்றம் தொடா்கிறது...

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் பேசும்போது கில்லை பத்ரிநாத் விமர்சித்ததாவது:

Advertisement

Advertisement

“ஷுப்மன் கில் தமிழ்நாட்டு வீரராக இருந்திருந்தால் அணியில் இருந்து நீக்கியிருப்பார்கள். எதிர்பார்ப்புகளை அவர் சிறிதளவுகூட பூர்த்தி செய்யவில்லை.

நீங்கள் ரன் எடுக்கலாம், எடுக்காமலும் அவுட் ஆகலாம். ஆனால் விளையாடும்போது ஒரு நோக்கத்தை முன்வைத்து விளையாடவேண்டும். பவுலர்களை சோர்வடைய வைக்க வேண்டும்.

அதிகளவிலான பந்துகளை எதிர்கொண்டு பந்தை பழையதா க மாற்றி, பின் வரிசை வீரர்களுக்கு உதவ வேண்டும். 100 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நிற்பதுதான் அணிக்கு நல்லதாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவின் மார்னஷ் லபுஷேன், நாதன் மெக்ஸ்வீனி இதைதான் செய்தார்கள். நிறைய பந்துகளை எதிர்கொண்டு பவுலர்கள சோர்வடைய செய்ததன் விளைவாக கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.

நான்கு பேர் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக விளையாடுவது கிரிக்கெட் கிடையாது. உங்களால் செய்ய முடிந்ததை செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த தொடரில் கில்லிடம் இதை பார்க்க முடியவில்லை.

அவரால் பீல்டிங்கும் சரியாக செய்ய முடியவில்லை. அணிக்காக என்ன செய்தார் என்ற கேள்வி என் மனதில் உள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments