இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது ஓட்டல் அறையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீரை தூய்மை செய்யும் இயந்திரத்தை எடுத்து வந்துள்ளதாக தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜன.18) இந்தூரில் நடைபெற இருக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும்போது, கடைசி போட்டி வாழ்வா? சாவா என்றிருக்கிறது.
இந்தப் போட்டியை விட இந்தூர் மாசடைந்த குடிநீர் பிரச்னை ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தூரின் பகீரதபுரத்தில் நர்மதா ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைக் குடித்த மக்களுக்கு, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுமார் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாட இந்தூருக்கு வந்திருக்கும் இந்திய அணியின் கேப்டன் அறையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீரை தூய்மை செய்யும் இயந்திரம் பற்றி கவனம் திரும்பியுள்ளது.
இந்திய வீரர் விராட் கோலி பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யும் குடிநீரை பல ஆண்டுகளாகக் குடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ், விராட் கோலி உஜ்ஜையினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று, சுமார் 2 மணி நேரம் நந்தி ஹாலில் இருந்தனர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மால்வா மாவட்டத்திலுள்ள பாகலமுகி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
பொலிவுறு நகரமான இந்தூரில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.