சிட்னி சிக்ஸர்கள் அணியினர், ஸ்டீவ் ஸ்மித்.  படங்கள்: எக்ஸ் / பிபிஎல்
கிரிக்கெட்

சிட்னி சிக்ஸர்ஸ் வெற்றி: ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு!

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DIN

பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் இன்று (ஜன.11) களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் ஸ்மித் சதமடித்து அசத்தினார். முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222/3 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய பெர்த் ஸ்கார்செர்ஸ் 20 ஓவர்களில் 206/7 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஸ்டன் ஏகர் 66 ரன்களும் சாம் ஃபேனிக் 41 ரன்களும் எடுத்தார்கள்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணி சார்பில் ஷான் அப்பாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். டவார்ஷீஸ், கெர், ஹென்ரிக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

121* ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 8 இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 3 பிபிஎல் சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT