பிபிஎல் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்சிஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மழையின் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதமாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
சிட்னி சிக்ஸர் அணி பேட்டிங் செய்யவிருக்கிறது. சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கோசேர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் 3 முறை பெர்த் ஸ்கோசேர்ஸ் அணியும் 2 முறை சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் வென்றுள்ளன.
சிட்னி சிக்ஸர்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், டேனியல் ஹக்ஸ், ஜோஸ் பிலிப்ஸ், மொய்ஸஸ் ஹெண்ட்ரிக்ஸ், லாச்லன் ஷா, ஜேக் எட்வர்ட்ஸ், ஜோயல் டேவிஸ், பென் மனென்டி, பென் துவார்சியஸ், ஷான் அப்பாட், மிட்செல் ஸ்டார்க்.
பெர்த் ஸ்கார்சிஸ்: மிட்செல் மாட்ஷ், ஃபின் ஆலன், ஆரோன் ஆர்டி, ஜோஸ் இங்லீஷ், கூப்பர் கனோலி, அஸ்டன் டர்னர் (கேப்டன்), லாரி எவான்ஸ், ஜாய் ரிச்சட்சன், பரோடி கவுச், டேவிட் பயின், மஹ்லி பியர்ட்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.