பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணியிலிருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தனது தேசிய அணிக்கான போட்டியில் பங்கேற்க இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் (31 வயது) பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெதுவாக விளையாடுவதாக பாபர் அசாம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவரது விலகல் முடிவு சிட்னி சிக்ஸர் ரசிகர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.
பிபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமின் ஸ்டிரைக் ரேட் 103.06ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி சிக்ஸர் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பாபர் அசாமுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பிள்ளது.
சமீபத்தில் மார்க் வாக் சிட்னி சிக்ஸர் பிளேயிங் லெவனில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டுமெனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாபர் அசாம் விலகியுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
அடுத்ததாக, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் சென்று டி20 தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க பாபர் அசாம் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.