பிபிஎல் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் முதல் அணியாக பிளே-ஆஃப்க்கு முன்னேறியுள்ளது.
இந்த அணிதான் கடந்த சீசனில் கோப்பை வென்று, நடப்பு சாம்பியனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஐந்து ஓவர்கள் முடிவில் 32/0 ரன்கள் இருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இதன்மூலம் இரு அணிக்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அதனால், ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் 13 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே-ஆஃப்க்கு முன்னேறியுள்ளது.
சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பிபிஎல் புள்ளிப் பட்டியல்
1. ஹோபர்ட் ஹாரிகேன்ஸ் - 13 புள்ளிகள் (தேர்வு)
2. மெல்பர்ன் ஸ்டார்ஸ் - 10 புள்ளிகள்
3. சிட்னி சிக்ஸர்ஸ் - 9 புள்ளிகள்
4. பெர்த் ஸ்கார்செர்ஸ் - 8 புள்ளிகள்
5. பிரிஸ்பேன் ஹீட் - 8 புள்ளிகள்
6. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - 6 புள்ளிகள்
7. மெல்பர்ன் ரெனிகேட்ஸ் - 6 புள்ளிகள்
8. சிட்னி தண்டர்ஸ் - 2 புள்ளிகள் (வெளியேற்றம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.