கோப்புப் படம் படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

DIN

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கணுக்கால் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்

இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பிக் பாஷ் தொடரில் விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு நேற்று முன் தினம் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பந்தினை எடுத்து எறிய முயற்சித்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் தொடருக்காக இந்த வாரத்தின் பிற்பகுதியில் துபையில் பயிற்சியைத் தொடங்கவிருந்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணியை கவலையடையச் செய்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தின் காயத்தின் தன்மை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து கவனித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாட் கம்மின்ஸின் உடல் நலனையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஷ் தொடரில் விளையாடியபோது, ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளரான மாட் குன்ஹிமேனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவரும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT