ஈடன் கார்டன்ஸ் மைதானம் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

95 சதவிகித டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன; முதல் டி20 போட்டிக்கு தயாராகும் ஈடன் கார்டன்ஸ்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு ஈடன் கார்டன்ஸ் தயாராகி வருகிறது.

DIN

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு ஈடன் கார்டன்ஸ் தயாராகி வருகிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது.

முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், இந்தப் போட்டிக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்நேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட மைதானம் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இதுவரை 95 சதவிகித டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் மூலம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT