முகமது ஷமி படங்கள்: முகமது ஷமி / எக்ஸ்
கிரிக்கெட்

தன்னம்பிக்கை மட்டும் போதும்: டி20யில் மீண்டும் களமிறங்கும் முகமது ஷமி!

இந்திய பந்துவீச்சாளர் ஷமி காயத்திலிருந்து மீண்டு வருவதில் சந்தேகத்துடன் இருந்ததாகக் கூறியுள்ளார்.

DIN

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமாகி மீண்டு வருவேன் என தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

பிஜிடி தொடரில் பங்கேற்பாரென பலரும் எதிர்பார்த்த நிலையில் பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை. அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்பாரென பிசிசிஐ அறிவித்துள்ளது.

2014இல் இருந்து 23 டி20 போட்டிகளில் மட்டுமே ஷமி விளையாடியுள்ளார். 34 வயதாகும் முகமது ஷமி இன்று இரவு தொடங்கும் இங்கிலாந்துடனான டி20 தொடரில் கம்பேக் தரவிருக்கிறார்.

இந்த நிலையில் முகமது ஷமி கூறியதாவது:

காயத்தால் பயந்தேன்

நான் ஒரு ஆண்டு முழுவதும் காந்திருந்தேன். மீண்டும் உடல் நலத்தைப் பெற கடினமாக உழைத்தேன். குணமாகிவரும்போது மீண்டும் காயமடைந்ததால் மிகவும் பயந்தேன்.

முழு வீச்சில் இருக்கும் ஒருவர் காயம்பட்டு என்சிஏக்கு (தேசிய கிரிக்கெட் அகாதமி) சென்று மீண்டு வருவது மிகவும் கடினமானது.

காயம் ஏற்படும்போது, ஒரு விளையாட்டு வீரனாக நீங்கள் பலமடைகிறோம் என நினைக்கிறேன். மனதளவில் வலுவாக இருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒரு சில விஷயங்களை செய்வோம்.

தன்னம்பிக்கை மட்டும் போதும்

என்ன முடிந்ததோ அது முடிந்தது. நான் காயத்திலிருந்து குணமடைந்து வந்துவிட்டேன். கடினமாக உழைத்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். நான் அதைத்தான் நம்புகிறேன். காயமானாலும் நாட்டுக்காக உங்களது அணிக்காக மீண்டு வரவேண்டும். அதனால் சண்டையிடுங்கள், முன்னேறுங்கள்.

உங்கள் திறமை மீது தன்னம்பிக்கை இருந்து, நீங்களும் பலமாக இருந்தால் போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. எதை செய்வதற்கும் தன்னம்பிக்கை போதுமானது.

ரிதம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்தும் ஒரு ஒழுங்கில் இருக்கும். உடல்நிலை, மன நிலை, திறமை என அனைத்தும் பந்துவீச்சுக்கு முக்கியம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT