ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலியா படம்: ஐசிசி
கிரிக்கெட்

ஹாட்ரிக் சாம்பியன்ஸ்..! 3ஆவது முறையாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸி.!

மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

DIN

மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப்பை தொடர்ச்சியாக 3ஆவது முறையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய மகளிரணி.

ஆஸி. அணியின் கேப்டன் அலீஸா ஹீலி தொடர்ச்சியாக 3ஆவது முறையாக ஐசிசி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.

முதன்முதலாக ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2014-2016இல் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 2017-2020லும் 2022-2025 வரையிலுமான சுற்றுகளில் ஆஸி. முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைத்துள்ளது.

2022-25 சுற்றில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் 3-0, பாகிஸ்தானுடன் 3-0, தென்னாப்பிரிக்காவுடன் 2-1, மேற்கிந்தியத் தீவுகளிடம் 2-0 என வெற்றி பெற்றது.

இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடரில் 3-0 என வெற்றி பெற்றதும் கோப்பையை உறுதி செய்தது ஆஸ்திரேலிய அணி.

இது குறித்து 34 வயதாகும் அலீஸா ஹீலி கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வருகிறோம். இந்தச் சுற்று முடிவடைந்ததால் பெண்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அடுத்த சாம்பியன்ஷிப் சுற்றிலும் இதே ஆர்வத்தோடு இருப்போம். ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இந்தப் போட்டிகள் உதவும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT