விக்கெட் வீழ்த்திய வெற்றிக் களிப்பில் இந்திய வீரர்கள். AP
கிரிக்கெட்

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

3ஆவது டி20யில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது.

DIN

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்காட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று (ஜனவரி 28) நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 171/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தார்கள்.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பெற்று விளையாடவுள்ளார். இன்றையப் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஷமி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பில் 48 ரன்கள் எடுத்துள்ளது.

சாம்சன் 3, அபிஷேக் சர்மா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

தனுசு ராசிக்கு மனமகிழ்ச்சி: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

SCROLL FOR NEXT