சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜோஷ் இங்லிஷ் படம் |AP
கிரிக்கெட்

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 654 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 232 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஷ் 102 ரன்களும் எடுத்தனர்.

அதிவேக சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லிஷ் 93 பந்துகளில் அதிரடியாக 102 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ், அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர்கள்

ஷிகர் தவான் (இந்தியா) - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (85 பந்துகளில், 2013)

ஜோஷ் இங்லிஷ் (ஆஸ்திரேலியா) - இலங்கைக்கு எதிராக (90 பந்துகளில், 2025)

டுவைன் ஸ்மித் (மே.இ.தீவுகள்) - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (93 பந்துகளில், 2004)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன: அமைச்சா் சு.முத்துசாமி

தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமா்த்த கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மனு

கூடலூா் அருகே பழங்குடி மக்களின் புத்தரித் திருவிழா

கோவை மருதமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்

இறைச்சிக் கடை உரிமையாளா் உள்பட 2 போ் கொலை: 5 பேருக்கு இரட்டை ஆயுள்

SCROLL FOR NEXT