காலே டெஸ்ட்டில் ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளார்.
வார்னே - முரளிதரன் டிராபியில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் காலேயில் நேற்று (ஜன.29) தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தற்போது, ஆஸி. அணி 470 ரன்களை கடந்து வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 203, இங்கிலீஷ் 40 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவரும் உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். மேலும். இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் ஆஸி. வீரர் என்ற சாதனையையும் கவாஜா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுடன் 195* ரன்கள் அடித்ததே அவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்களாக இருந்தது.
296 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார் கவாஜா. ஆஸி. அணி 113 ஓவர் முடிவில் 470/3 ரன்கள் எடுத்துள்ளது.
பிஜிடி தொடரில் தொடர்ச்சியாக பும்ராவிடம் ஆட்டமிழந்த கவாஜா இலங்கைத் தொடரில் மிகவும் அசத்தலாக விளையாடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.