படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

DIN

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து - 113/8

பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை டேவினா பெரின் 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அபி நார்குரோவ் 30 ரன்களும், அமு சுரேன்குமார் 14 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் பருணிகா சிசோடியா மற்றும் வைஷ்ணவி சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷி சுக்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இறுதிப்போட்டியில் இந்தியா

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 15 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான கமலினி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கொங்கடி த்ரிஷா 29 பந்துகளில் 35 ரன்களும், சானிகா சால்கே 12 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பருணிகா சிசோடியா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 2) நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு!

நித்ய கன்னி... மனு பாக்கர்!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

கூமாபட்டி பிளவக்கல் அணையை மேம்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு!

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

SCROLL FOR NEXT