கிரிக்கெட்

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி.! டாஸ் வென்று பேட்டிங்!

டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணியைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற அதே வேட்கையுடன் இரண்டாவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் இன்று (ஜூலை 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

சுண்டு விரல் காயத்தால் அவதியடைந்த ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், ஜோஸ் இங்லிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள்

கிரெய்க் பிராத்வைட், ஜான் கேம்பல், கீசி கார்டி, பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆண்டர்சன் பிலிப், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

ஆஸ்திரேலியா

உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

Australia won the toss and elected to bat in the Test match against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

3 ஆண்டு தடைக்குப் பின்... 39 வயதில் கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்!

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!

SCROLL FOR NEXT