திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர்.  படம்: எக்ஸ் / திண்டுக்கல் டிராகன்ஸ்.
கிரிக்கெட்

டிஎன்பிஎல்: அஸ்வினின் திண்டுக்கல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 போட்டியில் இன்றிரவு (ஜூலை 4) திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதுகின்றன.

லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது.

குவாலிஃபயர் 1 போட்டியில் திருப்பூர் அணியிடம் தோல்வியுற்று குவாலிஃபயர் 2-க்கு கீழிறங்கியது.

லீக் போட்டியில் 3-ஆவது இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எலிமினேட்டரில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது.

திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி திடலில் இன்றிரவு 7.30 மணிக்கு குவாலிஃபயர் 2 போட்டி நடைபெறுகிறது.

திண்டுக்கல் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் தொடர்ச்சியாக நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

எலிமினேட்டர் போட்டியில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் எடுத்து, பேட்டிங்கில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

குவாலிஃபயர்-2 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஃபேன்கோட் செயலியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையாகப் பார்க்கலாம்.

Dindigul Dragons and Chepauk Super Gillies will clash tonight (July 4) in the TNPL Qualifier 2 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பதவி உயா்வுகோரி பேராசிரியா்கள் வாயில் முழக்கப் போராட்டம்

SCROLL FOR NEXT