விராட் கோலி  
கிரிக்கெட்

டெஸ்ட்டில் ஓய்வு பெற்றது ஏன்? 2 மாதங்களுக்குப் பின் மனம் திறந்த கோலி!

டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது பற்றி விராட் கோலி பேசியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விரைவிலேவே ஓய்வு பெற்றது ஏன்? என்பது பற்றி 2 மாதங்களுக்குப் பின் மனம் திறந்திருக்கிறார் விராட் கோலி.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, கடந்த மே மாதம் 12 ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கேப்டனான ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த ஒரே வாரத்தில் விராட் கோலியும் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

டி20 போட்டிகளிலும் ஓய்வை அறிவித்துவிட்ட விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

36 வயதான விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 100 சதத்தையும், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களையும் எட்டுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த நிலையில், டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்பது குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் விராட் கோலி.

மும்பையில் நடைபெற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் அறக்கட்டளையான யுவீகேன் (YouWeCan) தொடக்க விழாவில் விராட் கோலியும் கலந்துகொண்டார்.

முன்னாள் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான கௌரவ், விராட் கோலியை மேடைக்கு அழைத்தார். அவரிடம், “டெஸ்ட் ஓய்வுக்கான காரணத்தை எப்போது கூறுவீர்கள். கிரிக்கெட் களத்தில் ரசிகர்கள் உங்களை மிஸ் செய்கிறார்கள்” எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்து விராட் கோலி பேசும் போது, “இரண்டு நாள்களுக்கு முன்னதாகத் தான் என்னுடைய தாடிக்கு டை அடித்தேன். 4 நாள்களுக்கு ஒரு முறை உங்களின் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அர்த்தம்!” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு பேசிய விராட் கோலி, முடிவில் யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் உடனான கிரிக்கெட் பயணம் குறித்தும் நினைவுகூர்ந்தார்.

Virat Kohli Breaks Silence On Test Retirement For First Time, Says "When You Are Colouring...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அழகு பூந்தோட்டம்... கல்யாணி பிரியதர்ஷன்!

உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; வங்கதேசத்துக்கு 228 ரன்கள் இலக்கு!

அழகோவியம்... நிவிஷா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.88.69 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT